Breaking News

BREAKING பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!

அட்மின் மீடியா
0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 


159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது, 

அதிமுக கூட்டணி 75 இடங்களை மட்டுமை கைப்பற்றியுள்ளது. 

அமைச்சர்கள் 10 பேர் தோல்வியை தழுவியுள்ளனர்.நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும், அதனைத் தொடர்ந்து பதவி ஏற்பு விழாவும் நடைபெறும் என ஸ்டாலின் கூறியிருந்தார். 

இந்நிலையில் சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டு, பின்னர் ஆட்சி அமைக்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்பார். எனவே, வரும் 7ஆம் தேதி ஸ்டாலின் பதிவியேற்க உள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Share this