BREAKING: தமிழகத்தில் ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை..!
மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது
தமிழகத்தில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு நிறைவடைகிறது இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
மருத்துவ குழு ஆலோசனைக்குப் பின் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக தமிழக முதல்வர் தகவல் தெரிவிப்பு
Tags: தமிழக செய்திகள்