Breaking News

BREAKING: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? தளர்வுகள் அறிவிக்கபடுமா? 22-ஆம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை..!

அட்மின் மீடியா
0

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு நடைப்பெற உள்ளது. 



இந்த கூட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதா..? அல்லது சில தளர்வுகள் கொடுப்பதா..? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகின்றது. 

அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைப்பில் 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


கொரானா பரவலை கட்டுபடுத்த  13 பேர் கொண்ட ஆலோசனை குழு ஏற்படுத்தபட்டது


விஜயபாஸ்கர், அ.தி.மு.க.,


எழிலன் ,தி.மு.க.,

நயினார்நாகேந்திரன்,பா.ஜ.,

ஜி.கே மணி,பா.ம.க.,

முனிரத்தினம், காங்.,

சதன் திருமலைகுமார், மதிமுக.,

பாலாஜி, வி.சி.க.,

நாகை மாலி, மா.கம்யூ.,

ராமசந்திரன், இ.கம்.யூ.,

ஜவாஹருல்லா, ம.ம.க.,

ஈஸ்வரன், கொ.ம.தே.க.,

வேல்முருகன் த.வா.க.,

ஜெகன் மூர்த்த, புரட்சி பாரதம் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback