Breaking News

தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு: எதற்க்கு தடை, எதற்க்கு அனுமதி - முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



அனுமதிக்கப்பட்டவை எவை 

தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9, 10) இரு நாள்களும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கவும், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 சதவீதம் பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும். 




அனுமதிக்கப்படாதவை


நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரங்கு காலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது

முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது.அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.

இயங்க அனுமதிகப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அளிதல் உள்பட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். 

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும் 

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. > 

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. 

அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது. 

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.


https://drive.google.com/file/d/1KU1vG4IzHxOuNq1vTZpUERWoPUwBu4ef/view?usp=sharing

Tags: தமிழக செய்திகள்

Share this