திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ் - இன் உறவு ஏற்க முடியாது: பஞ்சாப் உயா்நீதிமன்றம் அதிரடி
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் -பெண்ணும் சேர்ந்து வாழும், லிவ் இன் ரிலேஷன்ஷிப் எனும் உறவு, ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல என பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண்ணின் பெற்றோா் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனா். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ள அவா்கள் 'பெண்ணின் குடும்பத்தினரால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, 'திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் - பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்
