Breaking News

உத்திரபிரதேசம் கொரானாவில் இரட்டையர் சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சோகம்

அட்மின் மீடியா
0

உ.பி. இரட்டையர் சகோதரர்கள் கரோனாவில் அடுத்தடுத்து உயிரிழப்பு: 



உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கடந்த வாரம் தங்களின் 24-வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரட்டையர் சகோதரர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி அடுத்தடுத்து உயிரிழந்து பெற்றோரை மீளாத் துயரில் விட்டுவிட்டனர்.

மீரட்டைச் சேர்ந்த தம்பதி கிரிகோரி ரேமண்ட் ரஃபேல், சோஜா ரஃபேல். இருவருமே உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் வசித்து வருகின்றார்கள்

இவர்களுக்கு ஜோபிரட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் இரட்டையர்கள், 3 நிமிடங்கள் இடைவெளியில் பிறந்தவர்கள்.

இருவரும் தங்கள் இளங்கலை பி.டெக் படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முடித்து தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். 

இருவருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, 

அதன்பின் கடந்த 1-ம் தேதி மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் இரட்டை சகோதர்கள் இருவரும் உடல்நலம் தேறினர் கடந்த 10ம் தேதி இரட்டையர்கள் இருவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது. இதனால் மகன்கள் இருவரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோர் இருந்தனர். ஆனால் அதன்பின்பு  3 நாட்கள் கழித்து ஜோபிரட் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்

அடுத்த சில மணிநேரத்தில் மற்றொரு சகோதரரான ரால்பிரடும் கரோனாவில் உயிரிழந்தார். இருவருக்கும் கரோனா வைரஸ் நுரையீரல் ஆழமாகப் பாதித்ததால் உயிரிழப்பு நேரந்தது என மருத்துவர்கள் தெரிவித்தனர்

https://www.ndtv.com/india-news/coronavirus-meerut-twins-who-tested-covid-positive-after-24th-birthday-die-hours-apart-2443975

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback