பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற தமிழக முதல்வர்: வைரல் வீடியோ
பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற தமிழக முதல்வர்: வைரல் வீடியோ
திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து இம்மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்
அப்போது அங்கிருந்த கொரோனா வார்டுக்கு பிபிஇ கிட் அணிந்து சென்று கொரானா நோயாளிகளிடம் நலம் விசாரித்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருக்கும் வார்டில் முதலமைச்சர் ஒருவர் நேரில் சென்று கவச உடை அணிந்து ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் அவரது ட்விட்டர் பதிவில்,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம் " என்று தெரிவித்துள்ளார்.
Sanghis all over from India trending Gobackstalin..
— Aravindhan (@ramaravnd) May 30, 2021
It's Happy that how he is working in the way of working, if you guys(sanghis) support then sure he is in wrong direction !! #Stalin sure he is the person who is going to end facism #TNsavior_MKStalin #Welcome_TNCM_Stalin pic.twitter.com/eHosTrxBMS
Tags: வைரல் வீடியோ
