Breaking News

இளைஞரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்

அட்மின் மீடியா
0

ஊரடங்கு மீறி வெளியே வந்த இளைஞர் ஒருவரை மாவட்ட கலெக்டர் கன்னத்தில் அறைந்த நிலையில் அந்த கலெக்டர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது




சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதைடுத்து சுராஜ்புர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  

இளைஞர் ஒருவர் சாலையில் வருவதை கண்டு அந்த இளைஞரை நிறுத்தி கேட்டதற்க்கு மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளைஞர்  மருத்துவமனையில் உணவு கொடுக்க சென்றேன் என கூறியுள்ளார் 

அதனை நம்பாத மாவட்ட ஆட்சியர்  இளைஞரின் கன்னத்தில் அறைந்ததுடன் அவரது செல்போனை வாங்கி ரோட்டில் வீசி எறிந்தார்.

இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட கலெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் குவிந்தது. 

மேலும் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதை அடுத்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், சுராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவை பணியிட மாற்றம் செய்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback