Breaking News

புதுச்சேரியின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் : ஆளுநர் தமிழிசை உத்தரவு

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று நியமித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராகக் கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 

இந்நிலையில் இன்று  புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக முதல்வரின் பரிந்துரையின் பேரில் ராஜ்பவன் சட்டமன்ற உறுப்பினர்  லட்சுமி நாராயணனைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை நியமித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback