Breaking News

வாட்ஸப் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வசதிகள் விரைவில் நிறுத்தப்படும்: பயனர்களுக்கு வாட்ஸப் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என பயனர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. 



மே 15ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.பின்னர் பல்வேறு எதிர்ப்புக்குப் பின்னர், மே 15க்குப் பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்கள் கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் விரைவில் நிறுத்தப்படும் என கூறியிருந்தது.

 இதை நினைவுபடுத்தும் விதமான வாட்ஸ் அப் தற்போது தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளது. 

ஆனால், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள தகவல்களில், வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்கவில்லை என்றால், அவர்கள் கணக்கு எதுவும் நீக்கப்படாது. ஆனாலும் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.அதாவது பயனர்கள், சாட்டிங் தவிர போன் மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை மேற்கொள்ள முடியும், ஆனால், பழைய சாட்டிங் தகவல்களை பார்க்க முடியாது என கூறப்படுகிறது.

அதில், ‘புதிய கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும். அதன் பின் சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும். பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும். 

பயனாளர்கள் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.

ஆனால், இன்கம்மிங் வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ கால்களில் பேச முடியும். 

நோட்டிபிகேஷன் எனேபிள் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து, பதிலளிக்க முடியும், 

அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும். 

Source:

https://www.indiatoday.in/technology/news/story/whatsapp-privacy-policy-goes-into-effect-this-week-what-happens-to-your-account-if-you-do-not-accept-it-1800445-2021-05-09

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Share this