Breaking News

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ஒருவாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுநலன் கருதி இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள் திறந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் அத்யாவசிய பொருட்கள் விலை அதிகமாக விற்க்கபடுகின்றது


இது குறித்து உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 

காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . உயர்த்தப்பட்ட விலையை வியாபாரிகள் உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback