காவல்துறை தடுத்தால் நடமாடும் காய்கறி வியாபாரிகள் புகார் அளிக்கலாம்! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி விற்பவர்கள் காவல் துறையினரால் தடுக்கப்பட்டால் புகார் அளிக்க தொடர்பு எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தளர்வு இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை விற்க அனுமதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கறி விற்கும்போது போலீஸார் தடுத்தால் புகார் அளிப்பதற்கான எண் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
மூன்று சக்கர வாகனம்/தள்ளுவண்டி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வியாபாரம் செய்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினால் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044-45680200 என்ற தொலைபேசி மற்றும் 9499932899 என்ற கைப்பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
— Greater Chennai Corporation (@chennaicorp) May 25, 2021
Tags: தமிழக செய்திகள்
