Breaking News

மக்கள் நீதி மய்யம் பொது செயலாளர் முருகானந்தம் கட்சியில் இருந்து விலகல்

அட்மின் மீடியா
0

சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பிரமுகர்கள் பலர் விலகத் தொடங்கினார். டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா, சந்தோஷ் பாபு உள்பட ஒருசில விலகிய நிலையில் இன்று மேலும் ஒருவர் விலகியுள்ளார். 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முருகானந்தம் இன்று செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். 

மேலும் கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது.கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சர்வாதிகாரம் அதிகரித்து விட்டதாகவும் 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதே தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback