Breaking News

சண்டை நிறுத்திற்க்கு பிறகு மீண்டும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீனர்கள் இடையே மோதல் வீடியோ

அட்மின் மீடியா
0

சண்டை நிறுத்திற்க்கு பிறகு மீண்டும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்


ஜெருசலேமில் உள்ள அல் - அக்சா வழிபாட்டு தலத்திற்க்கு வெளியே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது.

நேற்று அல்-அக்சா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா  வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டிற்கு பின்னர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டதை கொண்டாடும் வகையில் குரல் எழுப்பினார்கள்  அப்போது, அல் அக்சா வழிபாட்டு தளத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேலிய படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய படையினர் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியும் மோதலை கட்டுபடுத்தினார்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே 11 நாட்களுக்கு முன்னர் மோதல் நடைபெற்ற அதே அல்-அக்சா வழிபாட்டு தலத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback