Breaking News

BREAKING தேவைப்பட்டால் தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

அட்மின் மீடியா
0

 தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளதுசட்டமன்றக் குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,


பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை  செலுத்தி கொள்ளவேண்டும். முழு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளதாகவும், கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், தேவைப்பட்டால் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கட்டாயம் நீட்டிக்கப்படும் என்று பதிலளித்தார்.

மேலும், பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback