வியாபாரிகள் உரிய அனுமதி பெற்று தங்களது சொந்த வாகனங்களில் காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யலாம் -கோவை மாநகராட்சி
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசு நாளை 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மாநகராட்சியில் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுதவிர தியாகிகுமரன் மார்க்கெட், ராமர் கோவில் மார்க்கெட், காந்திபுரம் மார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா மார்க்கெட்டுகளில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்களது சொந்த வாகனங்களில் விற்பனை செய்ய விருப்பப்பட்டால் கோவை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் உதவி ஆணையர்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று விற்பனை செய்யலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். உரிய
உதவி ஆணையர்(பொ)
திரு.ஞானவேல் (கிழக்கு)-9442104113,
திரு.சுந்தர்ராஜ் (மேற்கு)-9442104146, திரு.மகேஸ்கனகராஜ் (வடக்கு)-9894099024,
திரு.சரவணன் (தெற்கு)-9442501877, திரு.சிவசுப்பிரமணியம் (மத்தியம்)-9489206055.
மேற்காணும் பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் திரு.எம்.அண்ணாதுரை அவர்கள் (9443799212) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று தங்களது பணியினை மேற்கொள்ளலாம். இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் ரத்தினம் (9443799201) நியமிக்கப்பட்டுள்ளார் என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.