Breaking News

நவீன அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது.. பாபா ராம்தேவ் கருத்து: இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்!

அட்மின் மீடியா
0

அலோபதி மருத்துவம் குறித்து பொய் செய்தி களை பரப்பி வரும், யோகா குரு, ராம்தேவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் ராம்தேவ் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,

நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. அலோபதி மருந்துகளை உட்கொண்டு பலர் உயிரிழந்து விட்டனர். அதனால்  கொரோனாவை அதனால் விரட்ட முடியாது  

மேலும், முட்டாள்தனமான அறிவியல் மற்றும் மருந்துகள் குறிப்பாக ரெம்டெசிவிர், ஃபவிப்ளூ மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அனுமதிக்கப்பட்ட பிற மருந்துகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தோல்வியடைந்து விட்டன என்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

இது தொடர்பாக இந்திய மருந்துவார்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்

நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது, தோல்வியடைந்தது என பாபா ராம்தேவ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். பாபா ராம்தேவின் கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று நவீன மருத்துவ வசதிகளை கலைத்துவிட வேண்டும், அல்லது அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback