Breaking News

தவறு செய்தால் பதவி நீக்கம் - அமைச்சர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின்

அட்மின் மீடியா
0

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



அமைச்சர்களாக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதன்முறையாக முதலமைச்சரானார் மு.க. ஸ்டாலின்.

இதனையடுத்து அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைமைச் செயலாளர், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியமைத்த பிறகு, நேற்றைய தினம் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் நடந்துமுடிந்து அதிகாரிகள் வெளியேறிய பிறகு, முதல்வர் அமைச்சர்களுடன் தனியாக உரையாடி அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். 


10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் மக்களிடம் நல்ல நிர்வாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக தொகுதியில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து நேரடியாக காவல்துறையிடம் தொடர்புகொள்ள கூடாது எனவும், காவல்துறை தன்வசம் உள்ளதால் நேரடியாக புகார்களை தன்னிடமே தெரிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பல எம்எல்ஏகளுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், நீங்கள் அமைச்சர்களாக உள்ளீர்கள். அதனால் மிகவும் நேர்மையாகவும், பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். எதாவது முறைகேடு நேர்ந்தால் அந்த அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அமைச்சர்களும் இந்த கருத்தை ஏற்று நடப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கின்றனர்.


Tags: தமிழக செய்திகள்

Share this