Breaking News

மூச்சுத்திணறலா குப்புற கவிழ்ந்து படுங்க :சென்னை மாநகராட்சி வெளீயிட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

கொரோனாவால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் நோயாளிகள் `ப்ரோனிங்' சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் P.C. ரூபேஷ்குமார் MBBS, PGDFM, MPH., பரவுநோயியல் நிபுணர், ICMR - NIE, Chennai.


 

இந்த ப்ரோனிங்கை எப்படி செய்வது ?

இதற்கு மூன்று  தலையணைகள் வேண்டும் 

ஒரு தலையைணை குப்புறப்படுத்து தலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும்..

ஒரு  தலையணை  கால்மாட்டுக்கு வைத்து மேடேற்ற வேண்டும்

இன்னும் ஒரு  தலையணையை  வயிற்றுப்பகுதியில் வைத்துப்படுக்க வேண்டும்.



இப்படி குப்புறப் படுக்கும் போது நமது வயிற்றுப்பகுதி கீழ்ப்புறமாகவும் முதுகுப்பகுதி மேல்ப்புறமாகவும் இருக்கும். இதனால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும். இதன் மூலம் உடலுக்கு குறைவான சுவாசிக்கும் பளுவில் அதிகமான ஆக்சிஜன் கிடைக்கும்.இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட. 


அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த படுக்கும் முறையை லேசாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

முதல் அரை மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை வயிற்றுப்பகுதி கீழ் இருக்குமாறு குப்புறப்படுக்க வேண்டும்.


அடுத்த அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை வலப்பக்கம் திரும்பி ஒருபக்கமாக படுக்க வேண்டும்

அடுத்த அரை மணிநேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை எழுந்து கால்களை நன்றாக நீட்டி உட்கார்ந்திருக்க வேண்டும். 

அடுத்த அரைமணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை இடப்பக்கம் திரும்பி ஒருபக்கமாக படுக்க வேண்டும்

அதற்கடுத்த அரைமணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மீண்டும் குப்புறப்படுத்திருக்க வேண்டும்.


இந்த பயிற்சியை செய்யக்கூடாதவர்கள் யார்?

கர்ப்பிணித் தாய்மார்கள்

ஆழ்சிரை ரத்த நாளக்கட்டிக்காக (DEEP VEIN THROMBOSIS) இரண்டு நாட்களுக்குள் சிகிச்சை எடுத்தவர்கள்

தீவிர இதய நோய் இருப்பவர்கள்

தண்டுவட எலும்புகள்/ இடுப்பெலும்பு/ தொடை எலும்பு முறிவுக்குள்ளானவர்கள்

மேற்சொன்னவர்கள் ப்ரோனிங் செய்யக்கூடாது.


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback