Breaking News

சி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்: எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது




லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: 

கொரோனா நோய்த்தொற்றின் லேசான அறிகுறிகளுக்காக சி.டி. ஸ்கேன் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சி.டி. ஸ்கேன் அதிகமாக பயன்படுத்துவதால் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது.பிற்காலத்தில் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாக, சர்வதேச அணுசக்தி ஆணையம் எச்சரித்துள்ளது.

லேசான தொற்று பாதிப்புக்காக ஸ்கேன் செய்வதில் எந்த பலனும் இல்லை.  லேசான தொற்று இருப்பது தெரிய வரும்போது வீட்டு தனிமையில் இருப்பதே நல்லது. ஒரு சி.டி. ஸ்கேன் 300 மார்பு எக்ஸ்ரேக்களுக்கு சமம். எனவே தேவையின்றி அடிக்கடி சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டாம். என  அவர் கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback