Breaking News

லட்சத்தீவில் இஸ்லாமியரை அன்னியப்படுத்துவதா? நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற தமிழக முதல்வர் வலியுறுத்தல்!

அட்மின் மீடியா
0

 லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற தமிழக முதல்வர் வலியுறுத்தல்! 


இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டரில் 

லட்சத்தீவுகளில் பிரபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. 

பிரதமர் தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்! 

என தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback