மோசடி வழக்கு..,நடமாடும் நகைக்கடை ஹரிநாடார் கைது..!
தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என பலராலும் அறியப்படுபவர் ஹரி நாடார். கடந்த சில ஆண்டுகளாக தமிழத்தில் அதிகம் பேசப்படும் நபராக உள்ள இவர், தற்போது சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார்
மேலும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக விளங்கினார்.
இந்த தேர்தலில் 37627 வாக்குகள் பெற்ற இவர், சுயேச்சையாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை பெற்றார்.
இந்நிலையில்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சார்ந்தவர் வெங்கட்ரமணி. இவர் பெரிய அளவிலான தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொழில் விஷயமாக கடன்தேவைப்பட்ட நிலையில், ஹரி நாடாரை இதற்காக அணுகியுள்ளார்.
ஹரி நாடார் ரூ.360 கோடி கடன் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், ரூ.7.20 கோடி முன்பணமாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனை நம்பிய வெங்கட்ரமணியும் ஹரி நாடாரை சந்தித்து ரூ.7.20 கோடி கொடுத்துள்ளார்.பணத்தை பெற்றுக்கொண்ட ஹரி நாடார் ரூ.360 கோடி கடன் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வெங்கட்ரமணி பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெங்களூர் காவல் துறையினர் ஹரி நாடாரை கைது செய்தனர். அவரை கைது செய்த பெங்களூரு போலீசார் விசாரணைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்