முக்கிய அறிவிப்பு! வருமான வரி செலுத்துவதற்கான இணையதளம் மாற்றம்!!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணைய தளத்தை மாற்ற இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆனால் எதிர்வரும் ஜூன் 7 ம்தேதி முதல் www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இயங்காது என்றும், பழைய போர்ட்டலில் இருந்து புதிய போர்ட்டலுக்கு மாற்றம் பணிகள் 6 நாட்களில் நிறைவடைந்து ஜூன் 7 முதல் புதிய இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய வலைதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 7 முதல் வருமான வரி தாக்கல் செய்ய கீழ் உள்ள இனையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
Tags: இந்திய செய்திகள்
