Breaking News

கொரோனாவுக்கு இலவச ஆயுர்வேத மருந்து: நெல்லூருக்கு படையெடுக்கும் ஆந்திர மக்கள்: முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

ஆந்திராவில் உள்ள  நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்த ஆனந்தயா என்ற ஆயுர்வேத மருத்துவர் கொரோனாவுக்கு இலவசமாக மருந்து வழங்கி வருகிறார். அந்த மருந்து கொரோனா வராமல் தடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 



அந்த ஆயுர்வேத மருந்தை  வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தவண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த ஆயுர்வேத மருந்தினை ஆய்வுக்கு அனுப்பியது. முதற்கட்ட ஆய்வு முடிவுகளின் படி அந்த மருந்து உட்கொள்பவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்பதால் மாவட்ட நிர்வாகம் அங்கு கூட்டத்தை கட்டுபடுத்த போலிஸாரை அனுப்பியுள்ளார்கள். மேலும் முழு அறிக்கைக்காக் மாவட்ட நிர்வாகம் காத்திருக்கின்றது 

இந்நிலையில் இந்த ஆயூர்வேத மருந்து தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் அடுத்து அந்த மருந்தை  ஐ.சி.எம்.ஆர். குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர ஆந்திர முதல்வர் உத்தரவும் இட்டுள்ளார்

Source:

https://www.thehansindia.com/andhra-pradesh/ys-jagan-orders-scientific-study-on-ayurvedic-medicine-distributed-at-krishnapatnam-in-nellore-687213

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback