மீண்டும் புதுபெயரில் பப்ஜி கேம். அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பப்ஜி கேம் இந்தியாவில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் (BATTLEGROUND MOBILE) என்ற பெயரில் விரைவில் வெளியாகும் என கிராப்டன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரவிருக்கும் மொபைல் விளையாட்டுக்கான வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை
இந்தியாவில் பிரபலமாக இருந்த பப்ஜி கேம், எல்லையில் இந்திய சீனா மோதல் போக்கின் காரணமாக பல செயலிகள் தடை செய்யப்பட்ட போது பப்ஜி கேமும் தடை செய்யபட்டது
ஏற்கனவே இருந்த பப்ஜி என்ற பெயர் மாற்றப்பட்டு பேட்டில்கிரவுண்ட் மொபைல் (Battleground mobile) என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனால், யூ டியூப்பில் இருந்த பப்ஜி தொடர்பான சேனலை நீக்கியுள்ள கிராப்டன் நிறுவனம், பேட்டில்கிரவுண்ட் என்ற சேனலை நிறுவி, அதில் பேட்டில்கிரவுண்ட் மொபைல் விளையாட்டுக்கான அறிவிப்பையும் டீசரையும் வெளியிட்டுள்ளது.
Tags: வைரல் வீடியோ
