Breaking News

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது சீன விண்கலம்

அட்மின் மீடியா
0

 செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது சீனாவின் ரோந்து வாகனம்



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா மட்டுமே, இதுவரை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. அதில், அமெரிக்கா அனுப்பிய ரோந்து வாகனம் மட்டுமே, செவ்வாயின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்நிலையில், 'தியான்வென்1' என்ற விண்கலத்தை சீனா அனுப்பியுள்ளது.அதில் உள்ள, 'ஜூரோங்க்' என பெயரிடப்பட்டுள்ள, 'ரோவர்' எனப்படும் ரோந்து வாகனம், நேற்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. 

செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். சீன நெருப்புக் கடவுளான 'ஜுரோங்' பெயரிலான இந்த ரோவா் உயா் தெளிவுத் திறன் கொண்ட நிலப்பரப்பு கேமரா உள்ளிட்ட 6 அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது. 

செவ்வாய் கிரக தரைப்பரப்பின் மண் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ஜுரோங், தரைப்பரப்பில் தண்ணீா் உள்ளதா, அங்கு முன்னா் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this