Breaking News

கொரோனா நோயாளிகளுக்கு கையடக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் : கேரள நிறுவனம் சாதனை!.

அட்மின் மீடியா
0

கொரோனா நோயாளிகள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அவசியமாகியுள்ளது. 

இந்த நிலையில், அவர்களின் அவசர தேவைக்கு உதவும் வகையில் கேரளாவில் செயல்படும் பாரத் ஏரோசல் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் நிறுவனம், கையடக்க ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் ஒன்று 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த ஆக்சிஜன் சிலிண்டரை வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி பயணத்தின் போதும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும்.முககவசம் போல சிலிண்டரின் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி, எளிதில் சுவாசிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இது முதலுதவி சிகிச்சை உபகரணமாகவும் மற்றும் அவசரகால நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நிறுவனத்தில் தயார் ஆகும் சிலிண்டர் வீடியோ

https://www.youtube.com/watch?v=9mpC1TKvmfA

எப்படி பயன்படுத்துவது இந்த  ஆக்ஸிஜன் சிலிண்டரை வீடியோ



 

Tags: இந்திய செய்திகள்

Share this