Breaking News

புதிய அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 புதிய அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளே அவர் போட்ட முதல் கையெழுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்பத்ற்க்கு ஆகும் இரண்டு தவணையாக நான்காயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென்றும் முதல் தவணை 2000 ரூபாயை இந்த மாதமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

அதன் படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரனோ நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதமே ரூ.2,000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback