Breaking News

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு உயர் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னதாகவே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback