Breaking News

நடுவானில் நடந்த திருமணம் சர்ச்சை ஆனது விசாரனை நடத்த மத்திய விமான போக்குவரத்துத்துறை உத்தரவு விமான பணியாளர்கள் சஸ்பெண்ட்.!

அட்மின் மீடியா
0

மதுரையை சேர்ந்த ராகேஷ் – தர்ஷனா என்னும் இந்த தம்பதி பெங்களூரு – மதுரை செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை  வாடகை எடுத்து, தங்களுக்கு நெருக்கமான உரிமையாளர்களுடன் பறக்கும் விமானத்திலேயே தாலிக்கட்டி  தங்களின் திருமணத்தை செய்துகொண்டனர். இந்த திருமணம் குறித்த புகைபடம் மற்றும் வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்வபர்கள் கொரோனா பரிசோதனை செய்திருந்தாலும், திருமணத்தின் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடந்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback