Breaking News

சவூதியில் ஆகஸ்டு முதல் வீட்டை விட்டு வெளியேற கொரானா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் அதிரடி உத்தரவு!

அட்மின் மீடியா
0

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆவணத்தை காட்டினால் மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.


அனைவரும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதை கட்டாயப்படுத்தும் விதமாக, வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து சமூக செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர் என சவுதி அரேபிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் குடியிருப்பு வாசிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback