புதிய கொள்கை: 7 நாட்களுக்குள் உரிய பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை - வாட்ஸ்அப் நிறுவனத்திற்க்கு மத்திய அரசு நோட்டீஸ்!
அட்மின் மீடியா
0
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதிய தனியுரிமை கொள்கைகள் மே 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றை ஏற்காவிட்டால் படிப்படியாக வாட்ஸ்அப்பின் செயல்பாடு நிறுத்திக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில்,வாட்ஸ்-அப்பின் புதிய தனிநபர் கொள்கையானது இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கும்,விதிகளுக்கும் எதிரானது.எனவே,அந்த கொள்கையை திரும்ப பெற வேண்டும்.
மேலும்,தனது அறிவிப்புக்கு 7 நாட்களுக்குள் வாட்ஸ்-அப் பதிலளிக்க வேண்டும் என்றும், இல்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது
source:
Tags: தமிழக செய்திகள்
