Breaking News

நாளை முதல் 6-ந் தேதி வரை வருமானவரித் துறை இணையதளம் செயல்படாது

அட்மின் மீடியா
0

வருமானவரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை வரும் 7-ந் தேதி முதல் வருமானவரித் துறை அறிமுகப்படுத்த இருக்கிறது. 



வருமான வரி செலுத்துவோருக்கு எளிமையாக நவீன முறையில் புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய இணைய பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் புதிய இணையதள பக்கத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக, பழைய இணையதள பக்கமான www.incometaxindiaefiling.gov.in நாளை முதல் அதாவது 01.06.2021  முதல் வருகிற 06.06.2021 தேதி வரை செயல்படாது. 

எனவே கணக்கு தாக்கல்செய்ய விரும்புவோர், இன்று (திங்கட்கிழமை) அல்லது வருகிற 7-ந் தேதிக்குப் பின்னர் தாக்கல் செய்யலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback