கொரோனாவால் இறக்கும் ஊழியர்கள் குடும்பத்திற்கு 60 வயது வரை சம்பளம் – டாடா ஸ்டீல் !
அட்மின் மீடியா
0
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
- டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் கடைசியாக அவருக்கு வழங்கபட்ட சம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும்
- ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படும்
- முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்
என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
#TataSteel has taken the path of #AgilityWithCare by extending social security schemes to the family members of the employees affected by #COVID19. While we do our bit, we urge everyone to help others around them in any capacity possible to get through these tough times. pic.twitter.com/AK3TDHyf0H
— Tata Steel (@TataSteelLtd) May 23, 2021
Tags: இந்திய செய்திகள்
