Breaking News

ஒரு லோகோ உருவாக்குங்க 50,000 பரிசை வெல்லுங்க: மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

லோகோ வடிவமைப்புக்கான ஒரு சிறப்பு போட்டி மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும்.


ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மத்திய அரசால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்துக்கு ஒரு லோகோவை வடிவமைத்துத் தருவதற்கான போட்டியில் சிறந்த லோகோ தரும் வெற்றி பெரும் நபருக்கு மத்திய அரசு   50 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது


இதுகுறித்த  மத்திய அரசின்  ட்விட்டர் பக்கத்தில் 


இதில் பங்கேற்க நீங்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 50,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் 

முதல் பரிசு வென்ற போட்டியாளருக்கு 50,000 ரூபாயுடன் போட்டியின் இ-சான்றிதழ் வழங்கப்படும். 

இந்த லோகோ வடிவமைப்பு போட்டியில் எந்த வயதினரும் பங்கேற்கலாம். 

லோகோவின் வடிவம் JPEG, BMP அல்லது TIFF வகைகளில் 600 dpi ரிசொலுசனுடன் இருக்க வேண்டும். 

இந்த லோகோ இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கவேண்டும். 

லோகோ பற்றிய தகவல்கள் 100 வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.


போட்டியில் பங்கு பெற விண்ணப்பிக்க


https://www.mygov.in/task/logo-design-contest-one-nation-one-ration-card-plan/


மேலும் விவரங்களுக்கு


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback