புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனத்திற்க்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 33 சட்டசபை உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதுவை சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்து புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், வி வி ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் ஆகியோரை மத்திய அரசு அறிவித்தது
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
