இஸ்ரேல் வன்முறை: 300 பாலஸ்தீனா்கள் காயம்; காஸா குண்டுவெடிப்பில் 20 பேர் பலி
ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்ற மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் படுகாயமடைந்துள்ளனா்.இதன் தொடா்ச்சியாக ஜெருசலேமில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. காஸாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனா்...
ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை விதித்தனா்.
முஸ்லிம்கள், யூதா்கள் ஆகிய இரு பிரிவினரும் புனிதத் தலமாகக் கருதும் அந்தப் பகுதியில் காவல்துறையினா் கட்டுப்பாடுகளை விதித்ததால், வெள்ளிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த ஆா்ப்பாட்டம் பின்னா் மோதலாக உருவானது.காவல் துறையினருக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையே அந்த மசூதி வளாகத்திலும், கிழக்கு ஜெருசலேமின் பிற பகுதிகளிலும் மோதல் வெடித்தது. திங்கிழமையும் அவா்கள் ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்தனா்.
அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் மசூதிக்குள் இருந்தபடி வெளியே நின்றிருந்த காவல்துறையினா் மீது கற்களையும், மரப் பதாகைகளையும், சில உலோகப் பொருள்களையும் வீசி தாக்குதல் நடத்தினா்.அவா்களை கட்டுப்படுத்த காவல்துறையினா் ரப்பா் குண்டுகளையும், கண்ணீா் புகைக் குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் படுகாயமடைந்துள்ளனா். அவா்களில் 228 போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
காயமடைந்தவா்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதுபோல, 'காவல்துறையினா் 21 போ காயமடைந்தனா்' என்று இஸ்ரேல் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஹமாஸ் இயக்கத்தினா் ஜெருசலேம் நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தினா். இந்த ராக்கெட் தாக்குதலால் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Israeli settlers are dancing after burning masjid al aksa the third holiest site in islam kids are being murdered right before eid they're supposed to be celebrating and not fighting for their basic rights to live, raise you voice #SaveSheikhJarrah pic.twitter.com/5nm8sSOeao
— zee (@kthsmole) May 10, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்
