கொரானா தடுப்பூசி செலுத்தியவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி லூக் மான்டோக்னிர் கூறினாரா ? உண்மை என்ன
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கோவிட்-19 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் உயிர் வாழ வாய்ப்பில்லை, அவர்கள் 2 வருடங்களில் இறந்து விடுவார்கள் என நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானி லூக் மான்டோக்னிர் தெரிவித்ததாக ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவருமான லூக் மான்டாக்னீர் என்பவர் கடந்த 18 ம் தேதி அமெரிக்காவில் ஒரு பேட்டியில் கொரானா தொற்ரு ஓயாத நிலையில் தடுப்பூசி போடுவது சரியா? என்றும் அதுபற்றி சர்வதேச நோயியல் ஆராய்ச்சியாளர்கள் ஏன் அமைதி காக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
நோய்த்தொற்று பரவிக்கொண்டே இருக்கும் சூழலில், தடுப்பூசி போடும் போது, வைரஸ் தொற்றானது வேறு வேறு வடிவத்தில் உருமாற்றம் அடையும் என்று பிரஞ்ச் மொழியில் அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த வீடியோ, "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள். என நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. அங்கு உள்ள சில ஆங்கில மீடியாக்கள் அந்த செய்தியினை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளார்கள், அந்த செய்தி உருமாறி தமிழிலும் பரவ தொடங்கியது
ஆனால் கொரானா தடுப்பூசி மக்களை 2 ஆண்டுகளில் கொன்று விடும் என லூக் மான்டோக்னிர் எந்த இடத்திலும் கூறவில்லை
An image allegedly quoting a French Nobel Laureate on #COVID19 vaccines is circulating on social media
— PIB Fact Check (@PIBFactCheck) May 25, 2021
The claim in the image is #FAKE. #COVID19 Vaccine is completely safe
Do not forward this image#PIBFactCheck pic.twitter.com/DMrxY8vdMN
Shocking claims from French Nobel prize winner Luc Montagnier... pic.twitter.com/5dMnXXfoDm
— Wittgenstein (@wittgenstein78) May 19, 2021
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
