Breaking News

+2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!

அட்மின் மீடியா
0

மிழகத்தில் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவர்கள் 

2 மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. இதே கருத்தைதான் பெரும்பாலான மாநிலங்களும்  தெரிவித்துள்ளது   எனவே தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகே பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி நிச்சயமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என கூறியுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback