கொரோனாவால் உயிரிழந்த நீதிபதி குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீஷ் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் திரு. நீஷ் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, சிறப்பு நேர்வாகக் கருதி 25 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்
https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pn180521_002.pdf
Tags: தமிழக செய்திகள்


