Breaking News

24 ம்தேதி வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு யாஸ் என பெயர் வைத்த ஓமன்

அட்மின் மீடியா
0

தென்மேற்கு பகுதியில் இருந்து காற்று வீசத் தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே தெற்கு அந்தமான் மற்றும்தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

மேலும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதகமாக உள்ளதால் வடக்கு அந்தமான், கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம். அதற்கடுத்த 72 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும். இப்புயலுக்கு 'யாஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓமனால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும். 

அது வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, வரும் 26-ம் தேதி மாலை அல்லது 27-ம்தேதி அதிகாலையில் ஒடிசா, மேற்குவங்க கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும். எனவும்  இந்த புயல் தீவிர, அதிதீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback