Breaking News

மே 20 முதல் 18 வயது மேலானவர்களுக்கும் தடுப்பூசி: மா சுப்பிரமணியன் தகவல்!

அட்மின் மீடியா
0

 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை மறுநாள் தொங்கிவைக்கிறார் ஸ்டாலின்



முன்னதாக கடந்த மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும், ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி எப்போது முதல் போடப்படும் என்று கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்

இன்று சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் 

 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி 20 ஆம் தேதி முதல் முதல்வரால் தொடங்கப்பட உள்ளது.  எனவே  மே 20 முதல் 18 வயதுக்கு மேலான அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுகொண்டார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback