செங்கல்பட்டில் 11 கரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலி
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகள் 11 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.
Tags: தமிழக செய்திகள்