Breaking News

காலை 10 மணிக்கு மேல் மறு காவல்நிலைய எல்லைக்கு சென்றாலே இ-பதிவு செய்திருக்க வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம் என காவல்துறை அறிவித்துள்ளது. 


பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறுகாவல் எல்லைக்குள் செல்ல இ-பதிவு கட்டாயம் என கூறியுள்ளது. இ-பதிவு செய்யாதவர்கள் மற்றொரு செக்டர் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது.



இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இன்று முதல் சென்னையில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று முதல் சென்னை மாநகர எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் மறு காவல்நிலைய எல்லைக்கு சென்றாலே இ-பதிவு செய்திருக்க வேண்டும்: 

காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டும் என்றால் இ-பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இ-பதிவு இன்றி வாகனங்களில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback