Breaking News

#BREAKING: ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்.., மத்திய அரசு..

அட்மின் மீடியா
0

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

 


தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்த நிலையில் சில வருடங்கள் முன்னதாக மூடப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில் ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும்  ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து அதை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டுமென கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில்  இடை காலமாக ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளுக்காக ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள்து

இந்நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஓத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback