#BREAKING தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும்..! முழு விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.
தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தற்போது இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று சென்னையில் மெட்ரோ ரயில்களை குறைந்த அளவில் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.
தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை ஊழியர்கள் மூலம் நடத்த தடையில்லை.
பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர் மட்டும் கலந்து கொண்டு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது
தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது
முழு ஊரடங்கான மே 2ஆம் தேதி முகவர்கள், வேட்பாளர்கள் வாக்கெண்ணிக்கை மையங்களுக்கு செல்ல எந்த கட்டுப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளனர்
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் மூடி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.#Tamilnadu #lockdown
— AIR News Chennai (@airnews_Chennai) April 29, 2021
(2/2) https://t.co/P6rTtWvcze pic.twitter.com/FmyUoT200A
Tags: தமிழக செய்திகள்
