Breaking News

BREAKING தமிழகத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு

அட்மின் மீடியா
0

 

BREAKING  தமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு:

 

 

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் எவை இயங்கும் எவை இயங்காது முழு விவரம்
 




 
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்


அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை

 
இரவு நேர ஊரடங்கின் போது தனியார் / பொது போக்குவரத்து & ஆட்டோ &  டாக்ஸி அனுமதி இல்லை


 மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்


அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி


தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி


பெட்ரோல் & டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி


இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது

 ரயில் & விமானங்கள் வழக்கம்போல இயங்கும்


முழு ஊரடங்கு ,  ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி
 
 
முழு ஊரடங்கின்போது காய்கறி கடைகள் மூடப்படும்


முழு ஊரடங்கின்போது திரையரங்குகள் & வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் மூடப்படும்


இறைச்சி & மீன் கடைகளும் ஊரடங்கின்போது செயல்பட அனுமதி இல்லை


பால் வினியோகம் ,  தினசரி பத்திரிகை வினியோகம் ,  மருத்துவமனைகள் ,  பரிசோதனை கூடங்கள் ,  மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும்


சரக்கு வாகனங்கள் ,  விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ,  எரிபொருள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குடமுழுக்கு விழாக்களில்  பொதுமக்கள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி
 
 
 தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிக்கையை படிக்க:
 

Tags: தமிழக செய்திகள்

Share this