Breaking News

பெற்றோர்களே எச்சரிக்கை: உங்கள் குழந்தையை கண்காணியுங்கள் பேஸ்புக் மூலம் சிறுமியின் வாழ்வை சீரழித்தவன் கைது

அட்மின் மீடியா
0

பேஸ்புக்  மூலம் அறிமுகமான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  நபரை, போலீசார் போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்க்காக போன் வாங்கி கொடுத்துள்ளார்கள்

ஆன்லைன் கிளாஸுக்கு நடுவே பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றை ஓப்பன்செய்துள்ளார் அந்த சிறுமி

அந்த பேஸ்புக் மூலம்  தஞ்சாவூரை சேர்ந்த 32 வயதான கமலக்கண்ணன் என்பவர்கடந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். 

பேஸ்புக்  மூலம் தொடர்ந்து பேசி வந்த கமலக்கண்ணன், சிறுமியிடம், அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய சிறுமியும், கமலக்கண்ணனிடம் நெருங்கி பேச ஆரம்பித்தார். 

காதலிப்பதாக கூறி சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் . பிறகு சிறுமியின் ஆபாச படங்கள் ,வீடியோக்கள் ,வீடியோ காலில் சாட்டிங் என அந்த இளைஞர் செயல்பட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமியை அடிக்கடி வீடியோகால் வரும்படி கேட்க சிறுமி அதற்கு முடியாது என்று சொல்லவே, உனது வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தொடங்கியிருக்கிறார் அந்த இளைஞர். இதனால் வேறு வழியின்றி அந்த சிறுமியும் பெற்றோருக்கு தெரியாமல் லைவ் சாட் , வீடியோ காலில் அந்த இளைஞனுடன் பேசி வந்துள்ள வந்தது தெரியவந்தது.

தீடிரென ஒருநாள் அந்த மாணவி அரைகுறை ஆடையுடன் கமலக்கண்ணனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் செல்போனை பறித்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த மாணவி கமலக்கண்ணனால் தனக்கு நடந்து வரும் கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.


இதைக் கேட்டு அதிர்ந்த அந்த சிறுமியின் தாய் உடனே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு, இதுகுறித்து வழக்கு செய்யும் வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

 சிறுமியை மிரட்டி வந்த பேஸ்புக் முகவரியை கொண்டு சேலத்தை சேர்ந்த அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அந்த இளைஞருக்கும் சிறுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது பேஸ்புக் போல போலி கணக்கு தொடங்கி ஒருவர் தொடங்கி அதன் மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து சைபர் கிரைம் மூலம் போலி கணக்கு தொடங்கப்பட்ட செல்போன் எண்ணை கண்டுபிடித்த போலீசார் அதன் மூலம் ஈரோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

 திருப்பூரில் ஒரு சாயபட்டரை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வரும் அவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதும், சிறுமியை அவர் மிரட்டியதும் தெரியவந்தது. 

இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள் உங்கள் வீட்டு குழந்தைகள் என்ன செய்கின்றார்கள் என்று பார்த்து கொண்டு இருங்கள்.அவர்கலுக்கு நல்லது எது கெட்டது என்று சொல்லி கொடுத்து வளருங்கள்


Tags: தமிழக செய்திகள்

Share this