சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூட தடைதமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ளா அனைத்து கடற்கரை பகுதிகளிலும் உள்ள சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அனைத்து அரசு விடுமுறை தினங்களிலும் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய கட்டுப்பாடுகள்
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.
கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்