Breaking News

வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர்கள் பதிவிடும் தவறான தகவலுக்கு அட்மின் பொறுப்பல்ல… உயர்நீதிமன்றம் அதிரடி

அட்மின் மீடியா
0
உறுப்பினர்கள் போடும் ஆட்சேபனைக்குரிய பதிவுக்கு வாட்ஸ்அப் குழு அட்மின் பொறுப்பாக முடியாது என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை  உத்தரவிட்டுள்ளது.





மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் கிஷோர் என்பவர் தாக்கல் செய்த மனுவில்:

நான் வாட்ஸ்அப் குழு ஒன்றின் அட்மினாக இருந்து வருகிறேன். எனது குழுவில் இருக்கும் ஒருவர், மற்றொரு உறுப்பினரான பெண் ஒருவர் குறித்து எனது வாட்ஸப் குருப்பில் ஆட்சேபனைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். புகார் குறித்து கோண்டியா போலீசார் வாட்ஸ்அப் குழுவின்  அட்மினாக இருக்கும் என் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.  என் மீது போலீசார் பதிவு செய்து இருந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என கூறி இருந்தார்


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒருவர் வாட்ஸ்அப் குழுவை ஆர்ம்பித்து  அட்மினாக இருப்பவர் அந்த குருப்பில் உள்ள மற்றவர்கள்  பதிவிடப்படும் கருத்துகளைத் தணிக்கை செய்யும் நபரோ அல்லது கட்டுப்படுத்தும் நபரோ இல்லை

குழுவில் உள்ள மற்ற நபா்கள் செய்யும் தவறுக்கு அட்மினை மட்டும் எப்படி பொறுப்பாக்க முடியும் என்றம் வாட்ஸ்அப் குழுவை நிர்வகிக்கப்பவா் குழுவில் உறுப்பினா்களை சோ்ப்பவா் மற்றும் நீக்குபவா் மட்டும்தான். அதில் பதிவிடப்படும் கருத்துகள் அனைத்துக்கும் அவரே முழுமையாக பொறுப்பு என்று கூற முடியாது என்று கூறி  தவறான பதிவை குழுவில் பதிவிடும் நபா்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கிஷோர் மீது பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.


மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் உத்தரவை படிக்க:


thanks to live law

Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback